Wednesday, May 13, 2020

கணக்கீடு பரீட்சை மாதிரி வினாத்தாள்
வடமாகாணக் கல்வித் திணைக்கள மாதிரி வினாத்தாள் - 2019

கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சை - 2019

வடமாகாணக் கல்வித் திணைக்களம் கணக்கீடு பரீட்சை மாதிரி வினாத்தாள் - 2019









கணக்கீடு வினாத்தாள் - I



கணக்கீடு வினாத்தாள் - II

கணக்கீடு விடைகள்

G.C.E Advance Level Accounting Past Paper with Answers   

வணிகக்கல்வி மாதிரி வினாத்தாள் - 2020
வடமேல் மாகாண கல்வித்திணைக்களத்தின் உயர்தர பரீட்சைக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் - 2020







வணிகக்கல்வி மாதிரி வினாத்தாள் - 2020

Download Business Studies Model Past paper 2020, Business Studies Past Paper with Marking Scheme. Download Past paper

Business Studies Question Paper - I

Business Studies Question Paper - II

Business Studies Answer Sheet

Monday, February 3, 2020

வியாபாரமும் துணைச் சேவைகளும்
வியாபாரமும் துணைச் சேவைகளும்


வணிகம் என்பது மனித தேவைகள், விருப்பங்களை நிறைவேற்றும் எந்தவொரு நடவடிக்கையும் ஆகும்.

வியாபாரம் என்பது வணிகத்தின் மூலம் இடம்பெறும் நடவடிக்கைகளுள் வியாபாரமே மிக்கியமானதாகும்.

துணைச் சேவைகளிற்கும் வியாபாரத்திற்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது வியாபாரத்தின் வளர்ச்சிக்குத் துணைச் சேவைகளும் துணைச் சேவைகளின் வளர்ச்சிக்கு வியாபாரமும் துணையாக அமையும்.

வியாபாரம் எனப்படுவது பொருள்கள், சேவைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்தல் வியாபாரம் எனப்படும். அதாவது உற்பத்திப் பொருள்களைக் கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும் வியாபாரம் ஆகும்.

வியாபார நடவடிக்கையின் போது பொருட்களின் உரிமையானது ஒரு பிரிவினரிடமிருந்து மற்றுமோர் பிரிவினருக்கு கைமாற்றுதல் இடம்பெறும், இது நிதிப் பெறுமானமொன்றின் அடிப்படையிலேயே இடம்பெறும்.

வியாபாரத்தின் வகைகள்.


உள்நாட்டு வியாபாரம்
  • சில்லறை வியாபாரம்
  • மொத்த வியாபாரம்

வெளிநாட்டு வியாபாரம்
  • ஏற்றுமதி வியாபாரம்
  • இறக்குமதி வியாபாரம்

உள்நாட்டு வியாபாரம்
ஒரு நாட்டின் எல்லைக்குள் பல்வேறு பிரிவினர்களுக்கிடையே இடம்பெறும் வியாபாரங்கள் அனைத்தும் உள்நாட்டு வியாபாரம் ஆகும். இதன் போது உள்நாட்டு பண அலகுகளிலேயே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.

உள்நாட்டு வியாபாரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
  • சில்லைறை வியாபாரம்
  • மொத்த வியாபாரம்

சில்லறை வியாபாரம்
இறுதி நுகர்வோரின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதற்கு பல்வேறு பொருட்கள் சேவைகளை விற்பனை செய்தல் சில்லறை வியாபாரம் எனப்படும். சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில்லறை வியாபாரி எனப்படுவர். இந்த நிலையங்கள் சிறிய மற்றும் பாரிய அளவில் காணப்படுகின்றன.

சில்லறை வியாபாரத்தின் பண்புகள்
  1. இறுதி நுகர்விற்காகப் பொருள்கள், சேவைகள் விற்பனை செய்யப்படும்.
  2. நுகர்வோர் தமக்குத் தேவையான பொருள்களைத் தேவையான அளவுகளில் தேவையான நேரங்களில் பெற்றுக்கொள்ள முடிதல்
  3. நுகர்வோருக்கு அண்மித்ததாகக் காணப்படல்:- நுகர்வோர் தமது தேவையை நிறைவு செய்யக்கூடியவாறு எந்தவொரு பிரதேசத்திலும் சில்லறை வியாபார நிலையங்களைக் காணக்கூடியதாக இருக்கும்.
  4. பல்வேறுபட்ட பொருள் வகைகள் காணப்படும்.:- அநேக சில்லறை விற்பனையகங்களில் விற்பனை செய்வதற்காக ஒரே தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது.

சில்லறை வியாபாரத்தின் முக்கியத்துவம் அல்லது அவசியம்
  1. நுகர்வோரது அன்றாடத் தேவைகள் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதற்குத் தேவையான பொருள்கள், சேவைகளை வழங்கல்
  2. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புதிய வகையான பொருள்களை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தல்
  3. சில வேளைகளில் கடனுக்கும் பொருள்களை விற்பனை செய்தல்
  4. உற்பத்திப்பொருள் தொடர்பாக நுகர்வோன் காட்டும் துலங்கல்களை உற்பத்தியாளனுக்கு அறிவிப்பதன் மூலம் பொருள்களின் தரத்தினை உளர்த்துவதற்குத் துணை புரிதல். 
மொத்த வியாபாரம்
மொத்த வியாபாரம் எனப்படுவது மீள் விற்பனை அல்லது வேறு வணிக நோக்கங்களுக்காகப் பொருள்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்தல் ஆகும். மொத்த வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர் மொத்த வியாபாரி எனப்படுவார்.

உதாரணமாக சில்லறை வியாபாரிக்கு 100 கீலோகிராம் சீனி விற்பனை செய்தல்

மொத்த வியாபாரத்தின் பண்புகள்
  1. மீள் விற்பனை செய்யும் நோக்கில் பொருள்களை கொள்வனவு செய்தல்
  2. பெரும்பாலும் பெருந்தொகையாகப் பொருள்கள் விற்பனைக்குக் காணப்படும்
  3. தெரிவு செய்யப்பட்ட சிலவகைப் பொருள்கள் மட்டுமே விற்பனைக்கு வைத்திருத்தல்
  4. பொதுவாக அலகுக்கான விற்பனை விலை குறைவாக இருத்தல்
  5. வியாபாரக் கழிவுகள் வழங்குதல்.